இன்றைய ராசிபலன்கள் – பிப்ரவரி 7, 2025
இன்றைய ராசிபலன் Today Rasi Palan Cineverse, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான ராசிபலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம் (மேஷ ராசி): இன்று ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணலாம். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். சொத்து சேர்க்கைக்கு வாய்ப்புகள் உள்ளன.
ரிஷபம் (ரிஷப ராசி): மன அமைதி காண்பீர்கள். நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். எதிரிகளின் தொல்லை குறையும். வாடகை வீடு தேடுபவர்கள் மற்றும் இடமாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும்.
மிதுனம் (மிதுன ராசி): இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி அனுபவிப்பீர்கள். மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். காதல் உறவுகள் திருமணமாகும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத மாற்றங்கள் இலாபத்தை ஏற்படுத்தும். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
கடகம் (கடக ராசி): இன்று தேவையற்ற எதிர்ப்புகள் ஏற்படலாம். பேச்சுக்கு மரியாதை குறையலாம். உறவுகளுக்குள் சண்டைகள் ஏற்படலாம்; கவனமாக இருக்கவும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
சிம்மம் (சிம்ம ராசி): மன மகிழ்ச்சி காண்பீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். தொலைபேசி மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.
கன்னி (கன்னி ராசி): பொறுமை தேவை. அவசர முடிவுகளை தவிர்க்கவும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்கவும். அடம்பிடிக்காமல், தெரியாத விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும்.
துலாம் (துலாம் ராசி): போட்டி, பொறாமை, சண்டைகள் ஏற்படலாம். தேவையற்ற மன அழுத்தம் ஏற்படலாம். வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் இருக்கலாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும்.
விருச்சிகம் (விருச்சிக ராசி): பெயர், புகழ், அந்தஸ்து உயரும். தேவைக்கு ஏற்ப பணவரவு கிடைக்கும். நீண்டநாள் உடல் உபாதைகள் நீங்கும். கமிஷன் தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.
தனுசு (தனுசு ராசி): உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். செல்லும் இடங்களில் மரியாதை கிடைக்கும். கடமைகளை சரிவர நடத்தி முடிப்பீர்கள். கடன் சுமையை குறைத்து, நல்ல பெயர் பெறுவீர்கள்.
மகரம் (மகர ராசி): கைநிறைய சம்பாத்தியம் கிடைக்கும். நீண்டநாள் வசூலாகாத பணம் கைக்கு வரும். மன நிம்மதி காண்பீர்கள். முதலீட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்து சேர்க்கை ஏற்படும்.
கும்பம் (கும்ப ராசி): நலமான நாளாக இருக்கும். அன்றாட வேலைகள் தடையின்றி நடக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் பெரிதாக மன அழுத்தம் இருக்காது. குடும்ப உறவுகளில் ஒற்றுமை காணப்படும்.
மீனம் (மீன ராசி): நல்ல செயல்களில் மனதை ஈடுபடுத்துவீர்கள். கடமைகளை தவறாமல் நிறைவேற்றுவீர்கள். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். நிதி நிலைமை சீராகும்.

No comments:
Post a Comment